என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்கள் மோதல்"
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் கீழப்பிடாகையை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜ்குமார் (வயது 25) விவசாயி. நேற்று ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் பள்ளம் செம்பிய வேலூர் பகுதியை சேர்ந்த வேதையன் மகன் செந்தாமரை கண்ணன் (வயது 31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரையும், செந்தாமரை கண்ணனையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் செந்தாமரை கண்ணனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்லப்பாண்டி (வயது 23). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி வேப்பூர் சென்றுவிட்டு புதுவேட்டக்குடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அதே ஊரைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ் (35). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் பொங்கல் பண்டிகை கொண்டாட ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று தனது மனைவி வெண்ணிலா மற்றும் 1 வயது குழந்தையான அஸ்வின் கார்த்திக் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புது வேட்டக்குடியில் இருந்து வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கருங்குட்டை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த செல்லப்பாண்டியன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் திருச்சி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நேற்று இரவு செல்லப்பாண்டியனும், இன்று காலை ரமேசும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் செல்லப்பாண்டியன் மது போதையில் இருந்ததால் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. பொங்கல் பண்டிகை தினத்தன்று 2 பேர் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேதராப்பட்டு:
வில்லியனூர் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது19). நேற்று இரவு இவர் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த தனது நண்பர் மதன் (19) என்பவருடன் அகரம் கிராமத்தில் இருந்து வில்லியனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை ராகுல் ஓட்டி செல்ல மதன் பின்னால் அமர்ந்து வந்தார்.
கூடப்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே வந்த போது முன்னாள் சென்ற காரை ராகுல் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த கார்த்திக் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராகுல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் அதிவேகமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார். மேலும் மதன் மற்றும் ஆனந்த கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆனந்த கார்த்திக் பரிதாபமாக இறந்து போனார்.
தொடர்ந்து மதன் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்த 2 வாலிபர்களும் 19 வயதே ஆனவர்கள் என்பதால் அகரம் மற்றும் கடப்பேரிக்குப்பம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
ஜெர்மன்நாட்டை சேர்ந்தவர் ஹெலாமரியாஸ் (வயது75). இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு புதுவைக்கு வந்து ஆசிரம விடுதியில் தங்கி அசிரமத்துக்கு சொந்தமான பள்ளியில் இசை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை பள்ளிக்கு செல்ல ஹெலாமரியாஸ் ஆசிரம விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பிரான்சுவா மர்த்தேன்வீதியில் வந்த போது இவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட ஹெலாமரியாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், கருவாகுறிச்சி காலனியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மகன் அவினாஷ் (வயது-19). இவர் தஞ்சையில் செயல்படும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அவர் கக்கரையில் உள்ள தனியார் மீன்பண்ணை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவினாஷ் படுகாயமடைந்தார். இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினர் சம்பவ இடம் விரைந்து சென்று அவினாசை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் என்ற ராஜசேகர் (வயது32). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்த இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் புதுவையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான தனவேலு (34) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் லிங்காரெட்டிபாளையத்துக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜ் ஓட்டிவந்தார். தனவேலு பின்னால் அமர்ந்து வந்தார்.
சந்தைக்புதுக்குப்பம் அருகே கைலாசபுரம் என்ற இடத்தில் வந்த போது எதிரே சந்தைக்புதுக்குப்ப முதுநகரை சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ், தனவேலு, சதீஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக 3 பேரும் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தனவேலு, சதீஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தில் பலியான ராஜிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மாலதி (24) என்ற மனைவி உள்ளார். தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 6 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்